
2029 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பாஜ மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நவி மும்பையில் தெரிவித்துள்ளார்.
திருமணம், விவாகரத்து போன்ற தனிப்பட்ட விவகாரங்களை நிர்வகிக்கும் பொதுவான கட்டமைப்பு பாலின சமத்துவம், சமூக நீதி மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகளை மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் மாநிலமாக விளங்குவதாகவும், இது மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.