
ஈரானுடனான போர்ச் சூழல் மற்றும் இஸ்ரேல் நோக்கிய விமான தாக்குதல் குற்றச்சாட்டை அடுத்து, 9 ஆயிரம் அதிரடிப்படை வீரர்கள் அடங்கிய 3-வது விமானம் தாங்கிப் போர்க்கப்பல் குழுவை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
இதன் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்ந்துள்ளதுடன், தேர்தலுக்குப் பின் வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை அமெரிக்கா முடக்கியுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர்ச் சூழல் நிலவுகிறது.