
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெசிகா பெகுலா மற்றும் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
ஜெசிகா பெகுலா 6-4, 2-6, 7-6 என்ற செட் கணக்கில் அமெண்டா அனிசிமோவாவை வென்றார், அதேபோல் ஸ்வியாடெக் மோதிய போட்டியில் ரிபாகினா காயம் காரணமாக விலகியதால் வெற்றி பெற்றார்.
ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக் மற்றும் ஜெசிகா பெகுலா நாளை நேருக்கு நேர் மோதுகின்றனர்.