
சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஓடிடி உரிமையை வாங்க முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.
முதல் பாகத்தை தயாரித்த வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், கடந்த டிசம்பரில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.