
தமிழகத்தில் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் ஈட்டும் கோவில்களில் அறங்காவலர்களைத் தேர்வு செய்ய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைவராகவும், ஓய்வு பெற்ற நீதிபதி ராமநாதன் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுவின் உறுப்பினர்களாகத் திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஓய்வு பெற்ற கலெக்டர் சம்பத் மற்றும் ஆன்மிக பேச்சாளர் சுமதி ஸ்ரீ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.