
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய வீரர் துருவ் ஜூரல் 68 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஃபார்முக்கு திரும்பினார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 460 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இப்போட்டியில் தேவ்தத் படிக்கல் 167 ரன்கள் குவித்து அசத்திய நிலையில், ஜூரல் தனது பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் கில்லுக்கு நன்றி தெரிவித்தார்.