
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைத் தளமான 'பைனான்ஸ்' தளத்தில் நடந்த சைபர் தாக்குதலில் சுமார் 6.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.52,000 கோடி) மதிப்பிலான டிஜிட்டல் சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
நிறுவனத்தில் பணியாற்றும் டெவ்ஆப்ஸ் பொறியாளரின் மடிக்கணினி ஹேக் செய்யப்பட்டு, அதன் உள்கட்டமைப்பு மூலம் இப்பணப் பரிமாற்றங்களுக்கு ஹேக்கர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பைனான்ஸ் நிறுவனம், இழப்புகளைத் தன் சொந்த நிதியிலிருந்து ஈடுசெய்வதாகவும், டெபாசிட்கள் மற்றும் வித்ட்ராயல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.