
சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டு, இன்று 2,906 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி, தொடர்ந்து 957.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.