
விஷால் இயக்கி நடித்துள்ள 'மகுடம்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சூப்பர் குட் பிலிம்ஸின் 99-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாகவும், அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் தொடங்கிய இப்படத்தின் இயக்கப் பொறுப்பை விஷால் ஏற்றுக்கொண்டதுடன், இதில் கேங்ஸ்டர் வேடத்தில் மூன்று கெட்-அப்களில் நடித்துள்ளார்.