Sports
தென் ஆப்பிரிக்க குத்துச்சண்டை வீரர் சொலனி டெட்டே சுட்டுக்கொலை

தென் ஆப்பிரிக்க குத்துச்சண்டை வீரர் சொலனி டெட்டே சுட்டுக்கொலை

Daily Thanthi2h
THE BRIEF
1

தென் ஆப்பிரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரரும், 11 விநாடிகளில் எதிராளியை வீழ்த்தி கின்னஸ் சாதனை படைத்தவருமான 38 வயது சொலனி டெட்டே மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு கேப் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றபோது, பைக்கில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

3

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த சொலனி டெட்டேயின் காதலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.