இந்தியாவில் இணைய சேவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டம் மூலம் தொலைதூர கிராமப்புறங்களிலும் அதிவேக இணைய வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைத்தொடர்பு துறையில் இது ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் நிலையில், இதற்கான கட்டமைப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.