ஒடிசா அரசின் 'Sovereign AI Park' திட்டத்தின் கீழ், HCLTech நிறுவனம் ரூ.14,257 கோடி முதலீட்டில் பிரம்மாண்டமான AI தரவு மையத்தை அமைக்க உள்ளது.
இந்தத் திட்டம் மூலம் மென்பொருள் பொறியாளர்கள், AI ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் உள்ளிட்ட சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இந்திய AI ஸ்டார்ட்அப்பான Sarvam AI நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த மையம், நாட்டின் டிஜிட்டல் தரவுகளைப் பாதுகாப்பாகச் சேமிக்க உதவும்.