
சென்னை அரும்பாக்கத்தில் தனியார் பள்ளி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய உடற்கல்வி ஆசிரியர் மூர்த்தி (34) கைது செய்யப்பட்டுள்ளார்.
11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அரும்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெற்றோர் பள்ளிக்குச் சென்று எச்சரித்த பிறகும் ஆசிரியர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.