மில்கி மிஸ்ட் நிறுவனம் தனது பொதுப் பங்கு வெளியீடு (IPO) மூலம் ரூ.1,553 கோடி நிதி திரட்டிய நிலையில், இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது.
ஐபிஓ விலையான ரூ.140-ஐ விட 18% உயர்ந்து ரூ.165-க்கு பங்குகள் பட்டியலான நிலையில், முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் விலை 30% வரை உயர்ந்தது.
இந்த வளர்ச்சியால் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.14,000 கோடியை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.