
உக்ரைனின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மாகாணம் கார்வி ரிக் நகரில் உள்ள வணிக வளாகம் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உக்ரைன்-ரஷ்யா போரில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.