
பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்க கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அரசாணையை முதல்வர் மு.க. ஸ்டாலின் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 25.55 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவிருந்த இந்தத் திட்டத்திற்கு மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சென்னை தீவுத்திடல் அருகே உள்ள பல்லவன் இல்லத்தில் ஏறக்குறைய 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.