
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில், பாலியல் வன்கொடுமை புகாரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தனிமையில் இருந்ததாகவும், பின்னர் மிரட்டியதாகவும் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் மோக்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மின்னணு சாதனங்களை ஒப்படைக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.