
சென்னை ராயபுரம் சூரியநாராயண சாலையில் த.வெ.க. கொடி கட்டிய சொகுசு கார், முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை ராயபுரம் போக்குவரத்து காவல்துறையினர் கைது செய்து, காரைப் பறிமுதல் செய்தனர்.
விபத்து தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.