
கர்நாடகாவின் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் ஆகஸ்ட் 15 அன்று வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மரியமங்கலத்தைச் சேர்ந்த அந்தோணி சுவாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய 3 தமிழர்கள் உயிரிழந்தனர்.
வனத்துறையினர் தற்காப்புக்காக சுட்டதாகக் கூறும் நிலையில், இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹனூர் போலீசார் பாரதிய நியாய சம்ஹிதாவின் பிரிவு 103(1)-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், குற்றவாளிகளின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.