கோவை மலுமிச்சம்பட்டி தனியார் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மதுரையைச் சேர்ந்த ஶ்ரீராம் (21), லலித் ஆதித்யா (20) மற்றும் திருநகரைச் சேர்ந்த ஹரிஷ் பாண்டியன் (20) ஆவர்.
மொபைல் போன் பறிப்பு விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் அமுதன் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தம் 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.