
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'ஜனநாயகன்' திரைப்படம் பஹ்ரைனில் உள்ள EPIX சினிமாவில் ரசிகர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பஹ்ரைன் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில், சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு ரசிகர்களின் ஆரவாரத்துடன் படம் வெளியானது.
திரைப்படத்தின் வெற்றிக்கு ஒத்துழைப்பு அளித்த பொதுமக்கள் மற்றும் மக்கள் இயக்கத் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.