/nakkheeran/media/media_files/2026/10/27/1171-2026-10-27-12-44-14.jpg)
மதுரை மேலூர் அருகே தனியாமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் மற்றும் சத்யா தம்பதியின் ஏழு வயது மகன் முத்துவேல் விளையாட்டின் போது கழுத்து இறுக்கப்பட்டு மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
சிறுவர்கள் விளையாடிய விபரீதம் குறித்துத் தெரிந்து கொண்ட இளம் சிறாரின் தாய் சந்தியா, தகவலைக் காவல் துறைக்குத் தெரிவிக்காமல் உடலை பாழடைந்த வீட்டுக்குள் கொண்டு சென்று மறைத்துள்ளார்.
உடந்தையாக இருந்த குற்றத்திற்காகத் தாய் சந்தியாவைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தியுள்ளனர் மற்றும் இளம் சிறார் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.