
இங்கிலாந்தின் ஷெபீல்ட் நகரில் 100 ஆண்டுகள் பழமையான வீட்டைப் புதுப்பிக்கும் பணியின்போது, படிக்கட்டுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பழைய பவுண்ட் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
1900-ஆம் ஆண்டுக்கு முன்பே கட்டப்பட்ட அந்த பாரம்பரிய வீட்டின் சுவரை இடித்து சுத்தம் செய்தபோது, துருப்பிடித்த இரும்பு பெயிண்ட் டப்பாவுக்குள் இந்த நோட்டுகள் கட்டுக்கட்டாகக் கண்டறியப்பட்டன.
மீட்கப்பட்ட நோட்டுகள் 1970-களின் காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ள நிலையில், தம்பதியினர் அவற்றை வங்கியில் செலுத்தி வீட்டுப் பில்களைச் செலுத்தியதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.