
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஐகியூப் மற்றும் ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பல்வேறு வேரியன்ட்களின் விலையை ரூ.500 முதல் ரூ.13,580 வரை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் உயர்த்தியுள்ளது.
டிவிஎஸ் ஐகியூப் 2.2 kWh பேஸ் வேரியன்டின் விலை ரூ.500-ம், டாப் எண்ட் ST 5.3 kWh வேரியன்டின் விலை ரூ.10,400-ம் உயர்த்தப்பட்டதை அடுத்து, இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.15 லட்சமாகவும், டாப் வேரியண்ட் விலை ரூ.1.72 லட்சமாகவும் மாறியுள்ளது.
ஆர்பிட்டர் மாடலின் பேஸ் V1 வேரியன்டுக்கு ரூ.7,000 மற்றும் டாப் வேரியண்டுக்கு ரூ.13,580 உயர்த்தப்பட்டதால், அதன் ஆரம்ப விலை ரூ.95,000 ஆகவும், உயர்நிலை வேரியண்ட் விலை ரூ.1.18 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.