
அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபைக்கான இடைக்கால தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேர்தலில் நாடாளுமன்றத்தை எந்த கட்சி கைப்பற்றுகிறதோ அந்த கட்சியே நாட்டின் சட்டம், அரசின் செலவுகளுக்கு அனுமதி அளித்தல் மற்றும் நிதி ஒதுக்குதல் போன்ற முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
டிரம்ப்பின் குடியரசு கட்சி வெற்றி பெற்றால் அது போருக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வழிவகுக்கும் என்றும், ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால் டிரம்ப் நிர்வாகத்திற்கு நிதி விவகாரத்தில் கூடுதல் அழுத்தம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.