
அஷ்ரப் இயக்கி நடித்துள்ள 'போட்டோகிராபர்' படத்தின் முதல் பாடலான 'மாயங்கள் மாயங்கள்' வெளியாகியுள்ளது, இப்படம் ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சைக்காலஜிக்கல் சர்வைவல் மிஸ்டரி திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜனனி நாயகியாக நடித்துள்ளார், ராஜ்குமார் சந்திரசேகன் இசையமைத்துள்ளார்.
மதிகெட்டான் சோலை என்ற மலைகிராமத்தில் ஒரு அரிய இயற்கை நிகழ்வைப் புகைப்படம் எடுக்க முயலும் நாயகனின் உயிர் பிழைப்புப் போராட்டமே இப்படத்தின் கதைக்களம்.