
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக செப்டம்பர் 8-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், வடசிறுவளூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கடவனூரில் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.
உள் தமிழகத்தில் செப்டம்பர் 8-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.