
நடிகை ஜான்வி கபூர் கரண் ஜோஹர் நடத்திய நேர்காணலில், பாலிவுட் நடிகர் ஒருவர் தனது உடலில் உள்ள அனைத்து மச்சங்களையும் பார்க்க வேண்டும் என்று மெசேஜ் அனுப்பியதாக அதிர்ச்சிகரமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், 'தடாக்' படம் மூலம் அறிமுகமாகி, சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் 'தேவரா' மற்றும் ராம் சரணுடன் 'பெத்தி' ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
ஜான்வி கபூர் நடித்த 'பெத்தி' திரைப்படம் தோல்வியடைந்ததோடு, அதில் அவரது கதாபாத்திரம் மோசமாகச் சித்தரிக்கப்பட்டதாக இயக்குநர் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.