
ஜப்பானில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆண்கள் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயரும், பெண்கள் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுரும் தலைமை தாங்கவுள்ள நிலையில், பெண்கள் அணிக்கு அமோல் மஜும்தார் பயிற்சியாளராகத் தொடர்கிறார்.
கடந்த 2023 சீன ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் லக்ஷ்மண் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.