
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக விமானங்கள் வாங்கியதில் 7.52 கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாக எழுந்த ஊழல் புகாரில் நாமல் ராஜபக்சே கைது செய்யப்பட்டார்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன் 5 மணி நேர விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு மாஜிஸ்திரேட் அசாங்க எஸ்.போதேரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் செப்டம்பர் 18-ம் தேதி வரை நாமல் ராஜபக்சேவை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.