
உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் பெனால்டி ஷூட்அவுட்டில் 3-4 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ஆட்டம் 3-3 என சமனில் முடிந்த நிலையில், இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கடைசி 26 விநாடிகளில் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
இந்தத் தோல்வியின் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் 8-வது இடத்தைப் பிடித்து தனது பயணத்தை நிறைவு செய்தது.