
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பாட்மிண்டன் ஆடவர் அணிகள் காலிறுதியில் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளது.
இதற்கிடையே மகளிருக்கான அணிகள் பிரிவு காலிறுதியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோல்வி அடைந்தது.