
கிராமப்புறங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான இடைவெளி 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, எல்பிஜி விநியோக நிலைமை மேம்பட்டதையடுத்து இந்த கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை தற்போது ரூ.957.50 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.