
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் செப்டம்பர் 2-ம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடாவில் செப்டம்பர் 3-ம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
உள் தமிழகத்தில் செப்டம்பர் 5-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், சென்னை புறநகரில் மாலை நேரங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.