
தற்போது ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா, தனது ஆரம்பகால மாடலிங் பணிக்காக முதன்முதலில் ரூ.3,000 மட்டுமே சம்பளமாகப் பெற்றுள்ளார்.
நயன்தாரா நடிப்பில் தற்போது 'டாக்சிக்' மற்றும் 'ஹாய்' ஆகிய படங்கள் உருவாகி வரும் நிலையில், அவர் சல்மான் கானுடன் நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
முன்பு பட விளம்பரங்களில் பங்கேற்காத நயன்தாரா, தற்போது சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி தனது படங்களை விளம்பரப்படுத்தி வருகிறார்.