
நவீன இணையத்தின் அடிப்படை வடிவமைப்பை உருவாக்கியதில் வின்டன் செர்ஃப் முக்கியப் பங்காற்றிய நிலையில், 1983 ஜனவரி 1-ம் தேதி ARPANET நிறுவனம் TCP/IP தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டது இணையத்தின் தொடக்க நாளாகக் கருதப்படுகிறது.
1990-ல் டிம் பெர்னர்ஸ்-லீ உருவாக்கிய World Wide Web (WWW) இணையத்தில் உள்ள தகவல்களை எளிதாக அணுக வழிவகை செய்தது.
இந்தியாவில் பொது மக்களுக்கான இணையச் சேவை 1995 ஆகஸ்ட் 15-ம் தேதி VSNL மூலம் தொடங்கப்பட்டபோது, 9.6 kbps வேகத்திற்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.