
சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த 13 வயது மாணவி ஜூ ஷூஹான், ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'ஸாய் சாங்' என்ற செயலியை உருவாக்கி ரூ. 2.5 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளார்.
ஹாங்சோவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஏ.ஐ தயாரிப்பு போட்டியில், 90 ஆர்டர்களைப் பெற்ற இந்த செயலி மூன்றாம் இடத்தைப் பிடித்து ரூ. 70,000 ரொக்கப் பரிசை வென்றது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் படிப்பதைக் கண்காணிக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த செயலி, கோடிங் அறிவு இல்லாமலேயே மொழி மாதிரியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.