
லக்னோ பால்கன்ஸ் கேப்டன் புவனேஷ்வர் குமார், யுபி டி20 லீக் வரலாற்றில் 400 டாட் பந்துகளை வீசிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார்.
கடந்த 4 சீசன்களில் 35 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மொத்தம் 124 ஓவர்களில் 408 டாட் பந்துகளை வீசி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
நோய்டா கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டக்வொர்த்-லூயிஸ் முறையில் லக்னோ பால்கன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.