
சர்வதேச கமாடிட்டி சந்தையில் கச்சா எண்ணெய் விலை 97 டாலராகவும், தங்கம் அவுன்ஸ் 4,050 டாலராகவும், வெள்ளி அவுன்ஸ் 58 டாலராகவும் நிலைகொண்டுள்ளன.
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி கொள்கை அறிவிப்பு ஜூலை 28-29 தேதிகளில் வெளியாகவுள்ள நிலையில், வட்டி உயர்வுக்கான எதிர்பார்ப்பு 34 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பணவீக்க அச்சத்தால் டாலர் குறியீடு 101.46 புள்ளிகளாக உயர்ந்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தங்கத்தின் ரெசிஸ்டன்ஸ் 1,48,000 ரூபாயாகவும் சப்போர்ட் 1,39,800 ரூபாயாகவும் கணிக்கப்பட்டுள்ளது.