
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி மாயமான 85 தமிழர்கள் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சென்ற 305 பேரில் 220 பேர் மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர்.
மாயமானவர்களை அடையாளம் காணும் வகையில் உறவினர்களிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.