
லண்டன், மான்செஸ்டர், கோபன்ஹேகன் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பறந்த நான்கு பயணிகள் விமானங்களுக்குப் பறக்கும் போதே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமான நிலையங்களில் விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
முதற்கட்ட சோதனைகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படாத நிலையில், புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.