
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் குசுமந்துறை மாதகல் கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற பிளாஸ்டிக் படகில் சோதனை செய்த இலங்கை கடற்படையினர் 3 சாக்கு மூடைகளைக் கைப்பற்றினர்.
அதில் 35 கிலோ ஹெராயின் மற்றும் 45 கிலோ மெத்தபெட்டமைன் ஆகிய உயர்ரக போதைப்பொருட்கள் இருந்ததையடுத்து இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ.200 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படும் நிலையில், இவை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டதா என்பது குறித்து உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.