
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்யக்கோரிய மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரைப் பதவி நீக்கம் செய்யவோ இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவோ முடியாது என மறுத்துவிட்டது.
தேர்தல் ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பதவியைப் பெற நோட்டீஸ் பிறப்பித்துள்ள நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் சட்டத்திற்கு உட்பட்டே எடுக்கப்பட்டதாகக் கருதுவதாகத் தெரிவித்தனர்.
சட்டத்தை மீறி முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.