
ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றுள்ள கோவையைச் சேர்ந்த வித்யா, 400 மீட்டர் தடை ஓட்டத்தை 54.75 விநாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்துள்ளார்.
திருப்பூரில் முறையான செயற்கை ஓடுதளம் இல்லாததால் மண் ஓடுதளத்தில் பயிற்சி பெறும் வீரர்கள் போட்டிகளில் பங்கேற்கும்போது சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
திருப்பூர் எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் செயற்கை ஓடுதளம் அமைக்க கோரி விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ. பாலமுருகன் தெரிவித்துள்ளார்.