சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் தனது கிரிக்கெட் அணி சார்ந்த சொத்துக்களைப் பிரித்து, ஐபிஎல் வணிகத்தைத் தனி நிறுவனமாக மாற்றத் திட்டமிட்டுள்ள தகவல் வெளியானது.
இந்தத் தகவலைத் தொடர்ந்து சன் டிவி பங்கு விலை 18% வரை உயர்ந்ததுடன், புதன்கிழமையன்று 14% உயர்ந்து ரூ. 626.2 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.
சன் டிவியின் சந்தை மூலதனம் ரூ. 24,000 கோடியாக உள்ள நிலையில், ஐபிஎல் அணியின் மதிப்பு ரூ. 13,000 கோடி முதல் ரூ. 14,000 கோடி வரை இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.