
2026 ஜூலை மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜஸ்டின் க்ரீவ்ஸ் மற்றும் ஹேலி மேத்யூஸ் ஆகியோர் வென்றுள்ளனர்.
ஒரே நாட்டின் ஆண் மற்றும் பெண் வீரர்கள் ஒரே மாதத்தில் இந்த விருதை வெல்வது இது 5-வது முறையாகும், வெஸ்ட் இண்டீஸ் இந்த சாதனையை முதன்முறையாகப் படைத்துள்ளது.
ஆல்-ரவுண்டர் ஜஸ்டின் க்ரீவ்ஸ் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக இந்த ஐசிசி விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.