
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சூயஸ் கால்வாயை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஈரான் முயல்வதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஜூலை 29 அன்று அமெரிக்காவிற்குச் சொந்தமான 'எனர்ஜோஸ் வின்டர்' கப்பல் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளானதில், எகிப்தின் டாமியட்டா துறைமுகத்தில் இருந்த இரண்டு கப்பல்கள் சேதமடைந்தன.
உலகின் கடல்வழி கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 33 சதவீதமும், எரிவாயு விநியோகத்தில் 20 சதவீதமும் ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுவதால், ஈரான் இந்த பாதையை முடக்கி அழுத்தம் கொடுக்கிறது.