
இத்தாலியின் டுரின் காசெல்லே விமான நிலையத்தில், அமெரிக்காவிலிருந்து வந்த பயணியின் சூட்கேஸில் பரிசு காகிதத்தில் சுற்றப்பட்ட நிலையில் காய்ந்த ராட்சத முதலைத் தலை கண்டெடுக்கப்பட்டது.
வனவிலங்கு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் முதலைகள் பாதுகாக்கப்படுவதால், உரிய உரிமம் இன்றி அதன் பாகங்களைக் கொண்டு செல்வது சட்டப்படி குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்காக அந்தப் பயணிக்கு €20,000 முதல் €200,000 வரை (சுமார் ரூ.18 லட்சம் முதல் ரூ.1.8 கோடி வரை) அபராதம் அல்லது 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.