
இந்தியாவை விளையாட்டு வல்லரசாக மாற்றும் நோக்கில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.36,441 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் விரிவாக்கப்பட்ட 'கேலோ இந்தியா' திட்டத்திற்கு ரூ.29,054 கோடியும், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு ரூ.7,387 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2030-ல் ஆமதாபாத்தில் காமன்வெல்த் போட்டிகளையும், 2036-ல் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளையும் இந்தியாவில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.