
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற சிறப்பு குழந்தைகளுக்கான தடகளப் போட்டிகளில் 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.
வங்கி உதவி மேலாளராகப் பணியாற்றும் குருபிரசாத் சாமி மற்றும் தேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர்களை அமைச்சர் அருண்ராஜ் பாராட்டி கேடயம் வழங்கினார்.
ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் சிறப்பு குழந்தைகளைக் கண்டறிந்து பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.